திருவள்ளூர் நவ, 29
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை கொட்டியது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை இல்லை. ஆனால் வழக்கத்துக்கு மாறாக அதிகாலை நேரத்தில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் சாலைகளே தெரியாத அளவுக்கு புகைபோல் காணப்பட்டது.