Month: December 2022

சிலம்பம் சுற்றிக்கொண்டே நடைபயணம்.

சிவகங்கை டிச, 15 காரைக்குடியில் சிவகங்கைச் சீமை சிலம்பக் குழுவால் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் 20 கி.மீ. தூரம் சிலம்பம் சுற்றிக்கொண்டே நடைபயணம் செய்யும் சாகசம் நடந்தது. காரைக்குடி சூடாமணிபுரம் 120 அடி சாலையில் இந்த சாதனை…

அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

சேலம் டிச, 15 தி.மு.க. அரசை கண்டித்து தாரமங்கலம் நகர அ.தி.மு.க. சார்பில் நகராட்சி அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் கோவிந்தராஜ் வரவேற்புரை ஆற்றினார். தாரமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர்…

உலக கால்பந்து போட்டி எதிரொலி. முட்டை ஏற்றுமதி அதிகரிப்பு.

நாமக்கல் டிச, 15 நாமக்கல் மண்டலத்தில் இருந்து குவைத், ஈரான், கத்தார், மாலத்தீவு, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. கத்தாரில் நடந்துவரும் உலக கால்பந்து போட்டி எதிரொலியாக நாமக்கல் மண்டலத்தில் இருந்து முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. தற்போது மேலும்…

திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பேரணி.

நாகர்கோவில் டிச, 15 கன்னியாகுமரி மாவட்டத்தை குப்பை இல்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் செயலாக்கம் செய்யப்பட்டு வருகிறது.…

மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தர்மபுரி டிச, 15 தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதேபோல் 15-வது நிதிக்குழு அடிப்படை மானியம் 2-வது தவணை…

வீட்டுமனைப்பட்டா கேட்டு பெண்ணாடம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் திடீர் தர்ணா.

கடலூர் டிச, 15 பெண்ணாடம், பெண்ணாடம் அடுத்த சிறுமங்கலம் கிராமத்தில் அருந்ததியர் இன மக்கள் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் ஒரே வீட்டில் வசித்து வருவதால் அதே பகுதியில் உள்ள தோப்பு புறம்போக்கு நிலத்தில்…

பேருந்து, ரயில் நிலைய பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய 23 நாய்கள். மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை.

நெல்லை டிச, 15 நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளை, தச்சநல்லூர், நெல்லை, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டல பகுதியிலும் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன் விபத்து ஏற்பட்டு வருவதாக புகார் தெரிவித்தனர். அதன்பேரில் மாநகராட்சி சார்பில் சாலைகளில் சுற்றித்திரியும்…

ராணுவ வீரர் வாரிசுகளுக்கான வேலை வாய்ப்பு.

சென்னை டிச, 15 ராணுவ நலன் வேலைவாய்ப்பு மையம் சார்பில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பட்டப்படிப்பு முடித்த ராணுவ வீரர்களின் வாரிசுகள் பங்கேற்கலாம். இந்த முகாமில்…

அப்துல் கலாம் வழியில் பாடுபட வேண்டும். கவர்னர் உரை.

சென்னை டிச, 15 அப்துல் கலாம் வழியில் இளைஞர்கள் நாட்டு வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார் சென்னை எம்.ஐ.டியில் நிறுவப்பட்ட அப்துல் கலாம் சிலையை திறந்து வைத்து பேசிய அவர், 2047 ல் உலகிற்கு தலைமை…

சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடக்கம்.

சென்னை டிச, 15 சென்னையில் சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. 20வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவாக நடக்க இருக்கும், இந்த விழாவில் இரவின் நிழல், நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட 12…