சென்னை டிச, 15
சென்னையில் சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. 20வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவாக நடக்க இருக்கும், இந்த விழாவில் இரவின் நிழல், நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட 12 தமிழ் படங்கள் மற்றும் 48 நாடுகளை சேர்ந்த 107 படங்கள் திரையிடப்படுகிறது. மேலும் இந்த விழாவில் சிறந்த படம் சிறந்த நடிகர் உள்ளிட்ட எட்டு விருதுகள் வழங்கப்படுகிறது.