சென்னை டிச, 16
நடிகர் அஜித்தின் உலகம் சுற்றும் பயணத் திட்டத்தின் முதல் பாகம் முடிந்துள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். அவரது ட்வீட்டில் அனைத்து மாநிலங்களின் வாயிலாகவும் பயணித்ததன் மூலம் இந்தியாவில் அஜித்தின் பயணம் முடிந்துள்ளது. சென்ற இடங்கள் அனைத்திலும் ரசிகர்களின் அன்பு பிரதிபலித்தது இது அனைத்து ரைடர்களுக்கும் பெருமையான தருணம் துணிவு இல்லாமல் வெற்றி இல்லை என பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.