சென்னை டிச, 16
சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் போண்டாமணி தற்போது உடல்நலம் தேறி வீடு சென்றுள்ளார். கடந்த மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த இவருக்கு நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி பண உதவி செய்தனர். நேரில் சந்தித்து பேசி அமைச்சர் மா.சுப்பிரமணியம் மருத்துவ செலவு முழுவதையும் அரசியல் ஏற்கும் என்று கூறியிருந்தார். தொடர்ந்து வீடு திரும்பிய போண்டாமணி புதிய படத்தில் நடித்த ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.