Spread the love

சிவகங்கை டிச, 15

காரைக்குடியில் சிவகங்கைச் சீமை சிலம்பக் குழுவால் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் 20 கி.மீ. தூரம் சிலம்பம் சுற்றிக்கொண்டே நடைபயணம் செய்யும் சாகசம் நடந்தது. காரைக்குடி சூடாமணிபுரம் 120 அடி சாலையில் இந்த சாதனை பயணத்தை சாக்கோட்டை ஒன்றிய சேர்மன் சரண்யா செந்தில்நாதன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். 190 பள்ளி மாணவ- மாணவிகள் இதில் கலந்துகொண்டு தேவர் சிலை, ராஜீவ்காந்தி சிலை, கல்லூரி சாலை வழியாக சென்று அழகப்பா கல்வி குழும மைதானத்தில் சிலம்பம் சுற்றியபடி 20 கி.மீ. தூரத்தை 4 மணி நேரத்தில் கடந்தனர்.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் சோழன் உலக சாதனை புத்தக தலைவர் சண்முகநாதன் வழஙகிய சாதனை பட்டயத்தை அழகப்பா கல்வி குழும மேலாளர் காசி விசுவநாதன் மாணவர்களுக்கு வழங்கினார். சிலம்பாட்டக்குழு தலைவர் முனியாண்டி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *