Month: September 2022

வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்து வட்டாட்சியர் ஆய்வு.

வேலூர் செப், 28 அணைக்கட்டு ஒன்றியத்துக்குட்பட்ட திப்ப சமுத்திரம் ஊராட்சி குச்சிபாளையம் கிராமத்தில் பல ஆண்டுகளாக 120க்கும் மேற்பட்டோர் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி பலமுறை வருவாய்த்துறை…

பள்ளிகளில் சுகாதார வளாகத்தை சுத்தமாக பராமரித்திட மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவுரை.

விழுப்புரம் செப், 28 கோலியனூரை அடுத்த தளவானூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி வளாகம் மற்றும் கழிப்பறை தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து நேற்று மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பள்ளி மாணவ- மாணவிகள் சுற்றுப்புறத்தை…

எண்ணும், எழுத்தும் திட்ட கருத்தாளர் களுக்கு பயிற்சி.

விருதுநகர் செப், 28 விருதுநகர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் எண்ணும், எழுத்தும் பயிற்சி அளிக்க உள்ள கருத்தாளர்களுக்கான 3 நாள் பயிற்சி தொடங்கியது. பயிற்சியினை தொடங்கி வைத்து பாலையம்பட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர்…

இந்து முன்னணி நிர்வாகியின் வீட்டின் மீது கல்வீசியது இந்து
முன்னணியினரே காரணம் காவல் துறை விசாரணையில் இந்து முன்னணி நிர்வாகிகள் இருவர் கைது.

கோயம்புத்தூர் செப், 28 மேட்டுப்பாளையத்தில் உள்ள காமராஜ் நகரைச் சேர்ந்தவர் ஹரீஷ். இந்து முன்னணி இளைஞர் அணியின் நகரப் பொறுப்பாளராக உள்ளார். இவரது வீடு முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரின் முன்பக்க கண்ணாடி நேற்று உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் ஜன்னல் கண்ணாடியும் உடைந்து…

மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் உலக சுற்றுலா தினவிழா.

மாமல்லபுரம் செப், 28 மாமல்லபுரத்தில் இன்று சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரை கோயில் வளாகத்தில் உலக சுற்றுலா தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு வண்ண, வண்ண கலரில் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. உலக சுற்றுலா தின விழா ஆட்டம், பாட்டத்துடன் நடந்ததால் மாமல்லபுரம்…

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

காஞ்சிபுரம் செப், 28 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 360 மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று அவற்றின் மீது உடனடியாக…

வெகு நாட்களாக பூட்டி கிடக்கும் நூலகம். பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை.

கள்ளக்குறிச்சி செப், 28 சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொரசப்பட்டு கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் நலன் கருதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு நூலகம் கட்டப்பட்டது. அதனை அப்பகுதியை சேர்ந்த…

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்து மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவு.

புதுடெல்லி செப், 28 பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நாடு முழுவதும் கிளைகளை பரப்பி செயல்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான அடக்குமுறைகள், சட்டங்களுக்கு எதிராகவும், மத்திய அரசு, பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறது. அதே நேரம்…

பழம்பெரும் இந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதாசாகேப் விருது.

புதுடெல்லி செப், 28 சினிமா துறையில் சிறந்த சேவையாற்றி வரும் கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கபடுகிறது. தமிழகத்தில் சிவாஜி கணேசன், கே. பாலசந்தர் உள்ளிட்டோருக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுளது. இந்நிலையில், குஜராத்தை சேர்ந்த பழம்பெரும் இந்தி…

புதுவை மரப்பாலம் சந்திப்பில் ரூ.58 கோடியில் மேம்பாலம்.

புதுச்சேரி செப், 28 புதுவை மரப்பாலம் சந்திப்பில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க அங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்க இந்திய அரசின் சார்பு நிறுவனமான தேசிய…