Spread the love

விழுப்புரம் செப், 28

கோலியனூரை அடுத்த தளவானூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி வளாகம் மற்றும் கழிப்பறை தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து நேற்று மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் பள்ளி மாணவ- மாணவிகள் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள திறந்தவெளியில் சிறுநீர் மற்றும் இயற்கை உபாதையை கழிப்பதை தவிர்த்து கழிப்பறையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கழிவறையை பயன்படுத்திய பின்பு கை, கால்களை சுத்தமாக வைத்தல், தன் சுத்தம் பேண வேண்டும் என மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

அதோடு பள்ளிகளில் சுகாதார வளாகத்தை சுத்தமாக பராமரித்திட அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு தினந்தோறும் பள்ளிகள் திறப்பதற்கு முன்பும், மதிய உணவு இடைவெளிக்குப்பின்பும் கழிவறையை பராமரித்திட அறிவுறுத்தியதோடு இதனை சரியாக கடைபிடிக்காத பள்ளி தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த ஆய்வின்போது ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பொன்னம்பலம், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சிவசேனா, ஊரக வளர்ச்சித்துறை உதவி திட்ட அலுவலர் சபானா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பழகி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி உள்பட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *