விழுப்புரம் செப், 26
எம்.ஜி.சாலையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர் துணிகள் சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் மோகன், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ரமணி, விழுப்புரம் கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் கணேசன் மற்றும் விற்பனை நிலைய ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.