விழுப்புரம் செப், 25
விழுப்புரம் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணீஷ்அகர்வால் நேற்று மதியம் சிறப்பு ரயில் மூலம் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வருகை தந்தார்.
மேலும் அவர் ரயில் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு நடைமேடைக்கும் சென்று அங்கு பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை, இருக்கை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளனவா என பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் பயணிகள் காத்திருக்கும் அறையை பார்வையிட்ட அவர், அங்கு கூடுதல் இருக்கை வசதிகளை ஏற்படுத்தும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, ரயில் நிலைய 6வது நடைமேடையில் நடந்து வரும் விரிவாக்க பணிகளை பார்வையிட்ட அவர், அப்பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும் விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்களில் எந்தெந்த ரயில்களை எந்தந்த நடைமேடைகளில் உள்வாங்குவது என்பதை முடிவு செய்யக்கூடிய கட்டுப்பாட்டு அறை செயல்படும் விதத்தை கோட்ட மேலாளர் மணீஷ்அகர்வால் பார்வையிட்டார்.