Month: August 2022

கீழக்கரை இளைஞருக்கு சமூக சேவகர் விருது.

ராமநாதபுரம் ஆகஸ்ட், 15 நாட்டின் 75 வது சுதந்திர தின விழா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ், கீழக்கரை இரத்த உறவுகள் அமைப்பின்…

பாஜக.வினர் தேசிய கொடியுடன் ஊர்வலம்

புதுக்கோட்டை ஆகஸ்ட், 15 புதுக்கோட்டை நாட்டின் 75வது சுதந்திர தின விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்ட பாரதியஜனதா சார்பில் தேசிய கொடியுடன் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதில் நடிகை கவுதமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கையில் தேசிய கொடியுடன் ஊர்வலமாக…

தேசிய கொடிக்கு மரியாதை செய்த காந்திமதி யானை.

நெல்லை ஆகஸ்ட், 15 நாட்டின் 75 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் இநது அறநிலையத்துறைக்குட்பட்ட ஒரு சில கோவில்களில் மட்டும் கோவிலில் உள்ள பூஜை முறைப்படி தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். அதன்படி தமிழகத்தின் பிரசித்தி…

அக்காள்-தங்கைகள் 3 பேரை மணந்த பிரான்ஸ் வாலிபர்கள்.

நெல்லை ஆகஸ்ட், 15 நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியை பூர்வீகமாக கொண்ட மாசிலாமணி-ஆனந்தி தம்பதியினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார்கள். அங்கு மாசிலாமணி, தனியார் உணவகத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு காயத்ரி, கீர்த்திகா,…

சேலத்தில் 75 அடி நீள தேசிய கொடி

சேலம் ஆகஸ்ட், 15 நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திரத்திற்கு பாடுபட்ட தலைவர்களின் வரலாற்றை நினைவுகூரும் வகையில் சுதந்திர தின அமுதப் பெருவிழாவாக மத்திய, மாநில அரசுகள் கொண்டாடி வருகிறது. இதையொட்டி நாடு முழுவதும் சுதந்திர போராட்டத்திற்காக உயிர்நீத்த தலைவர்கள்,…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

காஞ்சிபுரம் ஆகஸ்ட், 15 மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினர் அணி வகுப்பு மரியாதையை பார்வையிட்டார். மேலும் மாவட்ட ஆட்சியர்…

விருது தொகையை பொது நிவாரண நிதிக்கு திருப்பி கொடுத்த இந்திய கம்யூனிஸ்டு தலைவர்.

சென்னை ஆகஸ்ட், 15 இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு இளம் வயதில் இருந்து பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கேற்று தனது 80 ஆண்டு கால பொது வாழ்வில் 7 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்து…

கீழக்கரை தெற்கு தெரு ஜமாத் சார்பில் சுதந்திர தின விழா

கீழக்கரை ஆகஸ்ட், 15 ராமநாதபுரம் மாவட்ட, கீழக்கரை தெற்கு தெரு ஜமாத் சார்பில் பள்ளிவாசலில் தேசிய கொடி ஏற்றப்பட்டு இந்திய சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் ஜமாத் நிர்வாகிகள், தலைவர், செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர். கொடி…

கீழக்கரை நகராட்சி சுதந்திர தினவிழா கொண்டாட்டம் .

கீழக்கரை ஆகஸ்ட், 15 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில், 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நகராட்சி நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா, நகராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியினை ஏற்றி சிறப்புரையற்றினார்கள். இவ்விழாவில் அனைத்து கவுன்சிலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், மற்றும் நகராட்சி…

தமிழக முதலமைச்சர் கொடியேற்றி மரியாதை

சென்னை ஆகஸ்ட், 15 நாட்டின் 75வது சுதந்திரன தின விழாவையொட்டி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியேற்றினார். தமிழகம் முழுவதும் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா இன்று வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சென்னை புனித…