Spread the love

சென்னை ஆகஸ்ட், 15

நாட்டின் 75வது சுதந்திரன தின விழாவையொட்டி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியேற்றினார்.

தமிழகம் முழுவதும் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா இன்று வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றினார். இந்நிகழ்ச்சியின்போது காவலர் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொள்கிறார்.

இதனைத்தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருதுடன் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை முதலமைச்சர் கவுரவிக்கிறார்.

இதேபோல் அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள் ஆகியவற்றையும் முதலமைச்சர் வழங்குகிறார்.

மேலும், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருது, முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள், கோவிட்19 தடுப்பு பணிக்கான சிறப்பு பதக்கம் உள்ளிட்ட விருதுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.

சுதந்திர தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்கள் என பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *