மாமல்லபுரம் ஆகஸ்ட், 15
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தொல்லியல்துறை பெரு நிறுவன சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் மாமல்லபுரம் அர்சுனன்தபசு அருகே ஹேண்ட் இன் ஹேண்ட், ரெனால்ட் நிசான் நிறுவனம் இணைந்து கல்லூரி மாணவ, மாணவிகள் தன்ன்னார்வலர்கள் என 1000 பேர் ஒன்று கூடி, தேசியக் கொடியின் மூவர்ண கலரில் டீ-சர்ட் அணிந்து தேசியக்கொடியை வடிவமைத்தனர்.
பின்னர் சிலம்பாட்டம், தப்பாட்டம், கரகாட்டம், மேளதாளத்துடன் பாரம்பரிய கலைநிகழ்ச்சி நடத்தி கையில் தேசியக்கொடி ஏந்தியபடி கடற்கரை கோயில் வரை ஊர்வலமாக சென்றனர். நிகழ்ச்சியில் செங்கல்பட்டு துணை ஆட்சியர் சஜீவனா, ஹேண்ட் இன் ஹேண்ட் இயக்குனர் கல்பனா சங்கர், ரெனால் நிசான் அலுவலர் சேவியர் லாக்ரோ, மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் ஆகியோர் பங்கேற்றனர்.