ராமநாதபுரம் ஆகஸ்ட், 15
நாட்டின் 75 வது சுதந்திர தின விழா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ், கீழக்கரை இரத்த உறவுகள் அமைப்பின் நிறுவனர் கபீர் என்பவருக்கு அவருடைய சமூக நல சேவையை பாராட்டி சிறந்த சமூக சேவகர் விருது வழங்கினார்.
இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டு பாராட்டினர்.