ராமநாதபுரம் ஆகஸ்ட், 15
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் நகராட்சியின் சார்பாக கொடி ஏற்றப்பட்டது. இதில் நகர்மன்ற தலைவர் கார்மேகம் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். நகர்மன்றத் துணைத் தலைவர், மற்றும் உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
மேலும் இந்நிகழ்வில் ராமநாதபுரம் மாவட்ட ஆணையாளர், பொறியாளர், பொதுமக்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.