Category: மாவட்ட செய்திகள்

பழுதான பாலம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

நெல்லை ஆகஸ்ட், 19 நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு தொட்டி பாலம் வாய்க்கால் பகுதியில் சமீபத்தில் புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்தப் பாலத்தில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. தென்காசி மற்றும் கடையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும்,…

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 19 கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 25 மற்றும் 81வது வார்டு, வடக்கு மண்டலம் 3வது வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை என்று நீண்ட காலமாக…

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க அவசர சட்டம்.முதலமைச்சர் ஆலோசனை.

சென்னை ஆகஸ்ட், 19 தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் பணத்தை இழந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தொடர்கதையாகி வரும் நிலையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும்,…

மறைந்த ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணனுக்கு அதிமுக சார்பில் அஞ்சலி

நெல்லை ஆகஸ்ட், 19 பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணன் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். நெல்லை டவுனில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நெல்லை கண்ணன் உடலுக்கு அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச்…

அரசு குழந்தைகள் இல்ல கட்டடத்தை அமைச்சர் கீதா ஜீவன் பார்வையிட்டார்..

ராமநாதபுரம் ஆகஸ்ட், 19 ராமநாதபுரம் வட்டம் சேதுபதி நகரில் உள்ள சமூக பாதுகாப்பு துறையின் கீழ் 5.26 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டஅன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்ல கட்டடத்தை சமூக நலன்- மகளிர் உரிமைத் துறை அமைச்சர்…

கீழக்கரைக்கு வருகை புரிந்த அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு.

கீழக்கரை ஆகஸ்ட், 19 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரைக்கு வருகை புரிந்த சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை, கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின் போது நகர் மன்ற துணைத் தலைவர் ஹமீது…

மாணவி ஸ்ரீமதி மரணம். பள்ளி தாளாளர், ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு.

விழுப்புரம் ஆகஸ்ட், 18 கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் சாவு குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே இவ்வழக்கு குற்றப்…

இ-சேவை மையங்கள் மூலம் தமிழ் வழியில் படித்தற்கான சான்றிதழ் – பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு

சென்னை ஆகஸ்ட், 18 பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக அரசின் இ-சேவை மையங்கள் மூலம், பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தற்கான (பிஎஸ்டிஎம்) சான்றிதழ் பெறும் சேவையை பள்ளிக்கல்வித் துறை அறிமுகம்…

விதிகளை மீறி செயல்பட்ட குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி சாலை மறியல் போராட்டம்.

நெல்லை ஆகஸ்ட், 18 நெல்லை மாவட்டம், அணைந்த நாடார்பட்டியில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. நெல்லை கல்குவாரி விபத்தை தொடர்ந்து இந்த கல்குவரி மூடப்பட்டது. ஏற்கனவே இந்த கல்குவாரியில் அரசு விதியை மீறி வெடி மருந்து வெடித்தாக பொதுமக்கள் தரப்பில் பல்வேறு…

குளச்சல் மீன்பிடி துறைமுகங்களில் மலை போல் குவிந்த மீன்கள்.

குளச்சல் ஆகஸ்ட், 18 குமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்ற 300க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள்…