ராமநாதபுரம் ஆகஸ்ட், 19
ராமநாதபுரம் வட்டம் சேதுபதி நகரில் உள்ள சமூக பாதுகாப்பு துறையின் கீழ் 5.26 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டஅன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்ல கட்டடத்தை சமூக நலன்- மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் பார்வையிட்டார்.
மேலும் மகளிர் பணிபுரியும் நிறுவனங்களில் பாதுகாப்பு பெட்டி( PINK BOX) நிறுவுவதற்காக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நேற்று வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆல்ஃபி ஜான் வர்கீஸ், ராமநாதபுரம் மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் அரசு அதிகாரிகள் கொண்டனர்