கீழக்கரை ஆகஸ்ட், 19
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரைக்கு வருகை புரிந்த சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை, கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின் போது நகர் மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
முன்னதாக அமைச்சரை சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட பொறுப்பாளருமான,காதர் பாட்சா முத்துராமலிங்கம் வரவேற்று உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார். இந்த சந்திப்பின்போது திமுக உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்