நெல்லை ஆகஸ்ட், 19
பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணன் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். நெல்லை டவுனில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நெல்லை கண்ணன் உடலுக்கு அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், திருநெல்வேலி மாவட்ட அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், மாமன்ற உறுப்பினர் சந்திரசேகர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைப்பினர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், பட்டிமன்ற பேச்சாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து இன்று மதியம் ஒரு மணி அளவில் அவருடைய உடல் இறுதிச்சடங்கு செய்யப்பட உள்ளது