Category: மாவட்ட செய்திகள்

வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு.

ராணிப்பேட்டை அக், 14 ராணிப்பேட்டை மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை நிறைவேற்றுவதில் உள்ள பிரச்சினைகள் மற்றும் தாமதங்கள் குறித்து அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை வளர்ச்சி திட்ட…

இந்தி திணிப்பு எதிர்த்து திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் நாளை மறுநாள் கண்டன ஆர்ப்பாட்டம்.

சென்னை அக், 13 இந்தி திணிப்பு எதிர்த்து திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நாளை மறுநாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாணவர்…

புதிய மின் மாற்றி பணிகள் நிறைவு. தொடங்கி வைத்த அமைச்சர்.

திருப்பூர் அக், 13 குடிமங்கலம் கோட்டமங்கலத்தில் ரூ. 2 கோடியே 76 லட்சம் செலவில் புதிய மின்மாற்றியை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். உடுமலை மின் பகிர்மான வட்டம் கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் புதிதாக 16 மெகா வாட் திறன்…

ஊத்துக்கோட்டையில் பயிர் காப்பீடு தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

திருவள்ளூர் அக், 13 ஊத்துக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் பேர் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை செலவு செய்து நெற்பயிர் இட்டனர். விவசாயிகள் ரூ.497 விதம் பயிர் இன்சூரன்ஸ் செய்தனர். சில…

பழங்குடியின மக்கள் தர்ணா போராட்டம்.

திருவண்ணாமலை அக், 13 திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, பெரணமல்லூர் ஆகிய ஒன்றியங்களில் உள்ள கெங்காவரம், தத்தனூர், அப்பேடு, நாச்சாவரம், ஈசத்தாங்கல் ஆகிய ஊர்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் 75 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இதில் கெங்காவரத்தில் 50 நபர்களுக்கு…

களக்காடு அருகே சுடலை கோவிலில் சாமி சிலை சேதம். பொதுமக்கள் சாலை மறியல்.

நெல்லை அக், 13 நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மலையடிபுதூரில் ஊய்காட்டு சுடலைமாட சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுடலை, மாசானசுவாமி, பேச்சியம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர்.சுடலை உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு தனித்தனியாக கற்சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில்…

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கான மருத்துவ முகாம்.

வேலூர் அக், 13 வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஆர்த்தி…

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

விழுப்புரம் அக், 13 விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள சுதாகர் நகர் மெயின்ரோடு பகுதியில் அங்குள்ள வியாபாரிகள் கடைகளை வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் அப்பகுதி சுருங்கியது. இதனால் அந்த சாலையில் இருசக்கர வாகனங்கள்கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டு…

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.

விருதுநகர் அக், 13 சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விருதுநகரில் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியோர் இணைந்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமந்த்…

ராமேசுவரம் கோவிலில் ரூ.1.5 கோடி உண்டியல் காணிக்கை.

ராமேசுவரம் அக், 13 ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல்கள் எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் துணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் நடந்த இந்த பணியில் கோவிலின் உதவி ஆணையர் பாஸ்கரன், ஆய்வாளர் மாரியப்பன், உதவி கோட்ட பொறியாளர்…