சென்னை அக், 13
இந்தி திணிப்பு எதிர்த்து திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நாளை மறுநாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாணவர் அணி செயலாளர் எழிலரசன் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.
மேலும் இந்தி திணிப்பு திட்டத்தையும், ஒரே பொது நுழைவு தேர்வு திட்டத்தையும் மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி 15ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.