Spread the love

சென்னை அக், 14

தமிழக சட்டசபை வருகிற 17 ம் தேதி கூடுகிறது. மறைந்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்படும். பின்னர் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் நாட்கள் குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும்.

மேலும் சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை இன்று மாலை 5 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர். தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து கலந்த ஆலோசிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *