திருப்பூர் அக், 13
குடிமங்கலம் கோட்டமங்கலத்தில் ரூ. 2 கோடியே 76 லட்சம் செலவில் புதிய மின்மாற்றியை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
உடுமலை மின் பகிர்மான வட்டம் கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் புதிதாக 16 மெகா வாட் திறன் கொண்ட புதியமின் மாற்றி அமைக்கப்பட்டுபணிகள் நிறைவு பெற்றுள்ளன. புதிய மின்மாற்றியால் கோட்டமங்கலம், வெள்ளியம்பாளையம், அய்யம்பாளையம்புதூர், பொன்னேரி உள்ளிட்ட கிராமங்கள் பயன் பெறுகின்றன. இதனால் 2100 பயனீட்டாளர்கள் பயன்பெறுவார்கள்.
இவ்விழாவிற்கு வருவாய்கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமை தாங்கினார். தொடங்கி வைத்தார் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் புதிய மின் மாற்றியை தொடங்கி வைத்தார்.