Author: Mansoor_vbns

பீலே மருத்துவமனையில் அனுமதி.

பிரேசில் டிச, 1 பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதய செயலிழப்பு மற்றும் புற்றுநோய் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அவர் விரைவில் குணமடைய…

விழிப்புணர்வு முகாம்.

திருப்பத்தூர் டிச, 1 ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. 14 கிராமங்களை கொண்டு பசுமை நிறைந்து காணப்படுகின்றன இங்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஏலகிரி மலையில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஏலகிரி மலையில்…

திருத்தணி முருகன் கோவிலில் மீண்டும் ஆன்லைன் மூலம் அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட்டுகள்.

திருவள்ளூர் டிச, 1 அறுபடைகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள் தோறும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், திருக்கல்யாணம், தங்கத்தேர்,…

ஆரணியில் அரசு ஊழியர் சங்கத்தின் பேரவை கூட்டம்.

திருவண்ணாமலை டிச, 1 ஆரணியில் அரசு ஊழியர் சங்கத்தின் பேரவை கூட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஆரணி வட்டக் கிளையின் பேரவை கூட்டம் ஆரணி தாலுகா அலுவலகத்தில் உள்ள நில அளவை அலுவலர் சங்க கட்டிடத்தில் வட்ட கிளை…

பீடி தொழிலாளிகள் ஆர்ப்பாட்டம்.

வேலூர் டிச, 1 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பீடி தொழிலாளர் சங்கத்தினர்பீடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாத்திட வேண்டும், அவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று…

மாநில செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கான போட்டியில் மாணவிக்கு தங்கப்பதக்கம்.

விழுப்புரம் டிச, 1 தமிழக அளவில் நடைபெற்ற 3-வது மாநில செவித்திறன் குறைபாடுள்ள மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து விழுப்புரம் எம்.ஆர்.ஐ.சி. ஆர்.சி. உயர்நிலைப்பள்ளியில் 10-ம்…

அருப்புக்கோட்டை கிளை சிறையில் நீதிபதி ஆய்வு.

விருதுநகர் டிச, 1 அருப்புக்கோட்டை-பந்தல்குடி சாலையில் அமைந்துள்ள கிளை சிறையில் மாவட்ட குற்றவியல் முதன்மை நீதிபதி கஜாரா திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இந்த ஆய்வின்போது கைதிகள் அறை, சமையலறை, கழிவறைகள், அலுவலக கோப்புகளை ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து டவுன் காவல்…

கிறிஸ்துமசுக்கு மறுநாள் விடுமுறையாக மேற்கு வங்காள அரசு அறிவிப்பு.

மேற்கு வங்காளம் டிச, 1 இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 ம்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் டிசம்பர் 26-ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவித்து மேற்கு வங்காள…

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

கடலூர் டிச, 1 கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் கம்மாபுரத்தில் நடந்தது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் பாலசுப்பி்ரமணியம் தலைமை தாங்கினார். வளர்ச்சித்திட்ட பணிகள்…

லாட்டரி சீட்டு விற்றவர் கைது.

கோயம்புத்தூர் டிச, 1 பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் துறையினர் டி.கோட்டாம்பட்டி வழியாக ரோந்து சென்றனர். அப்போது ஒருவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அதே…