வேலூர் டிச, 1
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பீடி தொழிலாளர் சங்கத்தினர்
பீடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாத்திட வேண்டும், அவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பீடி தொழிலாளர் சம்மேளன தலைவர் ராமச்சந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். பொதுச்செயலாளர் திருச்செல்வன் பேசினார். மாவட்ட செயலாளர் நாகேந்திரன், பொருளாளர் காசி, உதவி பொதுச் செயலாளர் சரவணன், உள்பட பலர் பங்கேற்றனர்.