திருப்பத்தூர் டிச, 1
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. 14 கிராமங்களை கொண்டு பசுமை நிறைந்து காணப்படுகின்றன இங்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஏலகிரி மலையில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஏலகிரி மலையில் இந்தியன் வங்கி கிளை உள்ளது. அண்ணா கலைஞர் அரங்கத்தில் பழங்குடியினருக்கான இந்தியன் ரிசர்வ் வங்கியின் சார்பில் நாடு தழுவிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு முகாமில் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் பிரசன்னா குமார், மண்டல துணை மேலாளர் ஹரிநாத், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருண் பாண்டியன், தாட்கோ மேலாளர் அமுதா, இந்தியன் வங்கி நகை மதிப்பீட்டாளர் சசிகுமார் முதன்மை மேலாளர் வேலூர் மண்டலம் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டு ஏலகிரி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.