விருதுநகர் நவ, 18
ராஜபாளையத்தில் ரயில்வே மேம்பால பணிகள், பாதாளசாக்கடை, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் என மூன்று வளர்ச்சி பணிகளும் ஒரே சமயத்தில் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக தென்காசி மெயின்ரோட்டில் செப்பனிடும் பணிகள் கடந்த 10 தினங்களுக்கு மேலாக நடைபெற்று வருவதால் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
இந்தநிலையில் நேருசிலை முதல் காந்திசிலை வரை செப்பனிடும் பணி முடிந்து மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. இதற்கடையே பழைய பஸ்நிலையம் தொடங்கி சொக்கர்கோவில் வரை உள்ள தென்காசி மெயின் ரோடான தேசிய நெடுஞ்சாலையில் செப்பனிடும் பணி தொடங்கியது. தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம்ராஜா ஆகியோர் சாலையில் இறங்கி நடந்து சென்று இந்த பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.