சிவகாசி நவ, 15
விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாக்காளர் சேர்ப்பு பணி குறித்த ஆலோசனைக்கூட்டம் திருத்தங்கல் பாலாஜி நகரில் நடந்தது. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், வெங்கடேஷ், கருப்பசாமி, சிவகாசி மண்டல செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமிபாண்டியன், சாமி என்ற ராஜ அபினேஷ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.