தேனி நவ, 17
தேனி அருகே தப்புக்குண்டில் தமிழக அரசு சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் கலந்து கொண்டு ரூ.11,35 190 மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.
மேலும் இந்த விழாவிற்கு வருகை புரிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் மக்கள் தொடர்பு முகாமில் அமைக்கப்பட்டு இருந்த சமூக நலன், வேளாண்மை துறை, சுகாதாரத்துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் துறை சார்ந்த கண்காட்சியினை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
மேலும் இந்த முகாமில் திட்ட இயக்குனர் தண்டபானி , சமூகத்துறை, சுகாதாரத்துறை, வேளான்மை துறை மற்றும் துணை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர் மேலும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.