தேனி நவ, 19
தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் முன்னாள் ராணுவ வீரர் ஸ்ரீராமன் (26), திருவண்ணாமலையில் அக்னி தீர்த்தம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் என்பவரது மகள் சித்ரா(24)என்பவருக்கும் இருவருக்கும் பேஸ்புக் மூலம் காதல் ஏற்பட்டு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நேற்று காத்திருந்த சித்ரா, தற்போது குடும்பத் தகராறு காரணமாக கணவனை பிரிந்து வாழ்வதாகவும் குழந்தைகளை வளர்க்க சிரமப்படுவதாகவும் கூறி, தன்னை தனது கணவருடன் சேர்த்து வைக்குமாறு கண்ணீர் மல்க தேனி ஆட்சியர் முரளிதரன் அவர்களிடம் கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து பெண்ணுக்கு ஆறுதல் கூறிய தேனி ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் பெண்ணை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.