தேனி செப், 9
விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தேனி மாவட்டம் தேவாரத்தில் நேற்று இரவு விநாயகர் சிலையை ஒரு டிராக்டரில் வைத்து பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் கட்டுப்பாட்டு இழந்து ஓடி கவிழ்ந்தது. இவ்விபத்தில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்தனர். இருவர் படுகாயம் அடைந்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.