தேனி நவ, 16
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே சாரல் மழையும், கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் தேனி அருகே உள்ள கோட்டைப்பட்டி பள்ளபட்டி, அய்யனார்புரம், அம்மாச்சியாபுரம் மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் முல்லைப் பெரியாறு மற்றும் வைகை ஆறு பாசனம் மூலம் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் நடவு பணியில் ஈடுபடுவது வழக்கம் .இதேபோல் தற்பொழுது தொடர்மழையினால் இப்பகுதியில் விவசாயிகள் இரண்டாம் போக நெல் விதைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.