தேனி நவ, 15
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புரட்சி பாரதம் கட்சி சார்பாக புரட்சி பாரதம் கட்சி தேனி மாவட்ட செயலாளர் புரட்சி ரெட் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த கோரிக்கை மனுவில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலூகாவில் கடமலை மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கரட்டுபட்டி கிராமத்தினை சுற்றி உள்ள பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல்லாண்டு காலமாக வசித்து வரும் நிலையில் ஆதிதிராவிடர் மக்களிடையே அரசின் இலவச வீட்டடி காலிமனைபட்டா வழங்க கோருதல் தொடர்பாக கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் முரளிதரனிடம் வழங்கினர்.
இந்நிகழ்வில் இருபதுக்கும் மேற்பட்ட புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.