Spread the love

தேனி நவ, 13

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை கோம்பை வனப்பகுதியை ஒட்டியுள்ள அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தோட்டத்தில் கடந்த செப்டம்பர் 28 ம் தேதி 2வயதுடைய ஆண் சிறுத்தை சோலார் வேலியில் சிக்கி உயிரிழந்தது. இது தொடர்பாக அவரது தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்திருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து தோட்ட மேலாளர்கள் தங்கவேல் மற்றும் இராஜவேல் கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் உள்ளனர்.

அதனைத்தொடர்ந்து தோட்ட உரிமையாளரான பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் ஆஜராகும்படி வனத்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர். அதற்கு ரவீந்திரநாத் நேரில் ஆஜராகாமல் அவர் சார்பாக வழக்கறிஞர்கள் ஆஜராகி கடந்த 1ம் தேதி ஆஜராகி விளக்கக் கடிதம் வழங்கினர். இதற்கிடையே நீதிமன்ற உத்தரவின்படி வனத்துறையினர் நேரில் ஆஜராகும்படி கடந்த 10 நாட்களுக்கு முன்பு இரண்டாவது முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்திற்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.

அதனடிப்படையில், நேற்று தேனியில் உள்ள வனச்சரகர் அலுவலகத்தில் மாவட்ட உதவி வன பாதுகாவலர் ஷர்மிலி முன்னிலையில் ஆஜரான ரவீந்திரநாத் விளக்கம் அளித்தார். தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவரிடம் விசாரணை நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *