தேனி நவ, 12
தேனி அருகே வீரபாண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வடுகபட்டியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் உள்ள நாட்டு நலப்பணி திட்டத்தின் கீழ் தேனி வாசன் கண் மருத்துவமனை இணைந்து பொதுமக்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த பரிசோதனை முகாமை நகர் மன்ற தலைவர் வீரபாண்டி, கீதா சசி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மேலும் இந்த கண் பரிசோதனை முகாமில் வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நகர் மன்ற உறுப்பினர்கள் வீரபாண்டி அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்குபெற்றனர்.
மேலும் இந்த கண் பரிசோதனை முகாமில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர். மேலும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த கண் பரிசோதனை முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மணிகண்டன், கௌதம் அசோக்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.