திருச்சி நவ, 16
காஞ்சீபுரம் தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச சுவாமிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி திருச்சி பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் தொண்டை மண்டல முதலியார் சமூக மக்கள் மற்றும் திருச்சி மடத்தின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் ‘எனக்கு சிறிது காலமாக உடல் நிலை சரியில்லாமல் போனதாலும், மருத்துவர்களின் ஆலோசனை படியும், என் உடல்நலத்தை கருத்தில் கொண்டும் முழு ஓய்வு எடுக்க இருப்பதால் நான் மடாதிபதி பதவியிலிருந்து விலகிவிட்டேன்’ என ஞானப்பிரகாச சுவாமிகள் கூறினார்.
இதையடுத்து 234-வது மடாதிபதியாக திருமடத்தின் சீடர்கள் விண்ணப்பித்து, மடத்தின் ஆலோசனைக்குழு மூலம் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று ஆலோசனை குழு தலைவர் விஜயராஜன் தெரிவித்தார்.