திருச்சி நவ, 14
இந்திய ராணுவத்தின் முப்படைகளில் வீரர்களை தேர்வு செய்ய ‘அக்னிபாத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் நபர்கள் ‘அக்னி வீரர்கள்’ என அழைக்கப்படுவார்கள். இந்த முறையில் தேர்வாகும் வீரர்கள் 4 ஆண்டுகள் ராணுவ பணியில் இருப்பர். இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வீரர்கள் வரை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான வீரர்கள் தேர்வு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது தமிழகத்தில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை உட்பட 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் என 16 மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களை அக்னி வீரர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வு இன்று திருச்சி தேசியக்கல்லூரியில் நடைபெற்றது.