திருச்சி டிச, 17
திருச்சியில் நுனி நாக்கை துண்டித்து டாட்டு குத்திய வழக்கில் கைதான ஏலியன் பாய் குறித்து காவல்துறை விசாரணையில் தேடிக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. உடலின் அந்தரங்க பாகங்களில் டாட்டூ போட ரூ.30000 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்து மாதத்திற்கு சுமார் மூன்று லட்சம் வரை சம்பாதித்துள்ளார். இதுவரை மூன்று பேருக்கு நாக்கு அறுவை சிகிச்சை செய்து டாட்டூ போட்டதும் தெரிய வந்துள்ளது.