கரூர் நவ, 16
கரூர் டவுன் காவல் ஆய்வாளர் அப்துல்லா உள்ளிட்ட காவலர்கள் நேற்று கரூர்-கோவை சாலை பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள, லாட்டரி சீட்டுகளை விற்றதாக, தான்தோன்றிமலை அருகே உள்ள வெங்ககல்பட்டியை சேர்ந்த சுந்தர வடிவேல் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து லாட்டரி சீட்டு மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.