Spread the love

கரூர் நவ, 14

குளித்தலை நகராட்சி மற்றும் கிராம பகுதி உள்பட குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 269 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய 2 நாட்கள் நடந்தது. இந்த முகாமில் புதிய வாக்காளர்கள் பலர் தங்கள் பெயர்களை சேர்க்க ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.

அதுபோல ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களது பெயர்களை, முகவரிகளையும் திருத்தம் செய்யவும், பலர் விண்ணப்பித்தனர். 2 நாட்களாக நடைபெற்ற இந்த முகாம்களில் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், உள்ளிட்ட பல அரசியல் கட்சி முகவர்கள் புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கவும் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை கண்டறிவதிலும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு உதவியாக இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *