விழுப்புரம் நவ, 15
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு ரூ.23.4 கோடியில் புதியதாக 440 வீடுகள் 300 சதுர அடி பரப்பளவில் 4 வீடுகள் ஒருங்கிணைந்த தொகுப்பு வீடாக கட்டித்தரப்படவுள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராஜா, மண்டல பொறியாளர் (சுற்றுசூழல்) செல்வக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.