விழுப்புரம் நவ, 12
கோவையில் காரில் குண்டு வெடித்த சம்பவம் எதிரொலியாக தமிழக காவல் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உத்திரவின் பேரில் தமிழகம் முழுவதும் காவல்துறையினரால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையடுத்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்திரவின் பேரில் விக்கிரவாண்டியில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையத்தில் விழுப்புரம் மாவட்ட வெடிகுண்டு நிபுணர்கள் துணை ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன் தலைமையில், துணை ஆய்வாளர் பார்த்த சாரதி, சிறப்பு துணை ஆய்வாளர் வெங்கடேசன், ஏட்டுகள் ராஜேஷ்கண்ணா, பாரதி, மோப்ப நாய் பயிற்சியாளர் வருண்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் வெடிமருந்து மோப்ப நாய் ராணி உதவியுடன் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர்.