நெல்லை நவ, 13
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நெல்லையில் பேரிடர் ஏற்படும் இடங்களில் உடனடியாக விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்து பயிற்சி வகுப்புகள் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ தலமையில் நெல்லை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு மழை, வெள்ளம் ஏற்படும்போது பாதிக்கப்படும் மக்களை மீட்பது, கால்நடைகளை பாதுகாப்பது உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பேரிடர் மீட்பு தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. அந்த பயிற்சி வகுப்பை முடித்தவர்களும் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேரிடர் மேலாண்மை வட்டாச்சியர் செல்வன், பாளை தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.