நெல்லை நவ, 15
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய தென்காசி, ஆய்க்குடி, சிவகிரி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது
இந்நிலையில் நேற்று மாலையில் பெய்த பலத்த மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது. இதனால் அனைத்து அருவிகளிலும் இரவில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் இன்று காலையிலும் மெயினருவி, சிற்றருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு இருந்து வருவதால் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.