நெல்லை நவ, 11
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் களக்காடு ஒன்றியம், களக்காடு தெற்கு வட்டாரத்திற்கு உட்பட்ட சிதம்பராபுரம் மற்றும் களக்காடு நகராட்சி பகுதியில் உள்ள நாடார்புதுதெரு, கோட்டை யாதவர் தெரு, மூங்கிலடி, பெருந்தெரு, அண்ணா சாலை கீழத்தெரு ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
அங்கு சாலை வசதி, கழிவுநீர் ஒடை அமைத்தல், மேல்நிலை தண்ணீர் தொட்டி பராமரித்தல், கால்வாய் பாலம் பகுதியில் தடுப்பு சுவர் அமைத்தல், வீட்டிற்கு அருகே அபாயகரமாக இருக்கும் பனை மரங்களை அப்புறப்படுத்துதல், போக்குவரத்து வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர்.
உடனடியாக சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் அரசு அதிகாரிகளை போனில் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், மாவட்ட துணைத்தலைவர் சந்திரசேகர், மலையடி புதூர் பஞ்சாயத்து தலைவர் மாவடி ரமேஷ், மாநில மகிளா காங்கிரஸ் இணை செயலாளர் கமலா, களக்காடு தெற்கு மற்றும் மத்திய வட்டார காங்கிரஸ் தலைவர்கள் அலெக்ஸ், காளபெருமாள், களக்காடு நகர காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ்வில்சன், நகராட்சி சேர்மன் சாந்தி சுபாஷ், மாவட்ட துணைத்தலைவர் செல்லப்பாண்டி உட்பட பலர் உடன் இருந்தனர்.