நெல்லை நவ, 9
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஆட்சியர் விஷ்ணு தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, சேரன்மகாதேவி துணை ஆட்சியர் முகம்மது சபீர் ஆலம், பயிற்சி ஆட்சியர் கோகுல், தேர்தல் தாசில்தார் கந்தப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆட்சியர் விஷ்ணு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் தி.மு.க. சார்பில் தகவல் தொழில்நுட்ப அணி காசி மணி, இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் சங்கர், அ.தி.மு.க. சார்பில் பகுதி செயலாளர் சிந்து முருகன், காங்கிரஸ் சார்பில் சொக்கலிங்க குமார், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் முத்துக்கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.