ராஜபாளையம் நவ, 9
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி புத்தூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து, கால்நடைகளை சிறப்பாக பராமரித்த பயனாளிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
இந்த நிகழ்வில் கால்நடை உதவி இயக்குநர் ராஜேஸ்வரி, மருத்துவர் கோவிந்தசாமி மற்றும் சேகர், பயனாளிகள், பொதுமக்கள் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.