கிருஷ்ணகிரி நவ, 9
போச்சம்பள்ளி அடுத்த பனங்காட்டூர் துணை மின் நிலையத்தில் போச்சம்பள்ளி சுற்றுவட்டார பொதுமக்களின் எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு ரூ.2 கோடியே 9 லட்சத்து 64 ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் கூடுதல் திறன் கொண்ட மின் மாற்றியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்ரங்கநாதன், ஜிங்கல் கதிரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி சிவசங்கர் மற்றும் பனங்காட்டூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் ஸ்டாலின் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் ஊழியர்கள் பொதுமக்கள் என பலர் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.