கிருஷ்ணகிரி நவ, 12
கிருஷ்ணகிரி அருகே உள்ள போலுப்பள்ளி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்டத்துறை வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் .தனபால் வரவேற்புரை ஆற்றினார். கிருஷ்ணகிரி மாவட்ட நீதிபதி தலைவர் மற்றும் நிரந்தர மக்கள் நீதிமன்ற மன்றத்தின் நீதிபதி வேல்முருகன் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி சிறப்பு மாவட்ட நீதிபதி மற்றும் மோட்டார் வாகன தீர்ப்பாயம் நீதிபதி அமுதா, கூடுதல் மாவட்ட நீதிபதி தாமோதரன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக வழக்கறிஞர்கள் கருணாகரன், சபி சபிக் அகமது ,மாவட்ட உரிமையியல் நீதிபதி ப்ரீத்தி பிரசன்னா, செயலாளர் தலைமை குற்றவியல் நீதிபதி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு ராஜசிம்மவர்மன், கிருஷ்ணகிரி முதன்மை சார்பு நீதிபதி கே .ஆர். லீலா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
மேலும் இந்தவிழிப்புணர்வு விழாவில் சுதந்திர இந்தியாவில் சட்டத்துறை வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வு குறித்த பேச்சுப் போட்டியும்,கட்டுரைப் போட்டியும் மாணவர்களுக்கு இடையே நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.