வேலூர் நவ, 7
வேலூரில் 9 மையங்களில் நில அளவையர் பணிக்கான தேர்வு 9 மையங்களில் நடந்தது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 798 கள ஆய்வாளர், 236 வரைவோர், 55 சர்வேயர் மற்றும் உதவி வரைவாளர் பதவிகள் என 1,098 காலி பணியிடங்களுக்கான தேர்வு நடந்தது. வேலூர் உட்பட 15 மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்பட்டன. தேர்வு மையத்தில் காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.